×

சைக்கிள் திருட முயன்றவர் கைது

நத்தம், ஆக. 31: நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகில் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அப்பகுதிக்கு வந்த வத்திபட்டியை சேர்ந்த பொன்மணி (22), ரமேஷின் சைக்கிளை திருடி தப்பியோட முயன்றார். இதனை பார்த்த ரமேஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பொன்மணியை பிடித்து நத்தம் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிந்து பொன்மணியை கைது செய்தனர்.

The post சைக்கிள் திருட முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ramesh ,Natham Govilbhty ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டாஸில் கைது..!!