×

டூவீலர் மீது வாகனம் மோதி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்

போடி, ஆக. 31: போடி முதல்வர் காலனியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (32). இவர் வீரபாண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது டூவிலரில், மனைவி ருக்மணி (29), மகள் சைனிகா (3), மகன் மகிழ்மித்ரன் (9 மாதம்) ஆகியோருடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மீனா விலக்கு அடுத்துள்ள அணைக்கரைப்பட்டி விலக்கு அருகில், எதிரே வந்த வாகனம், இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ருக்மணிக்கு தலையில் அடிபட்டது. மகேந்திரன், சைனிகா, மகிழ் மித்ரன் ஆகியோர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மகேந்திரன் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா போலீசார், அடையாளம் தெரியாத வாகன ஓட்டியை தேடி வருகின்றனர்.

The post டூவீலர் மீது வாகனம் மோதி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Mahendran ,Bodi CM Colony ,Veerapandi ,Dinakaran ,
× RELATED போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை