×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை, ஆக. 31: அரசு போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில், மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் சத்ய நாராயணன் வழி காட்டுதலின் படி மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மதுரை வடக்கு ஆர்டிஓ அலுவலகம் சார்பாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மதுரை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மதுரை (வடக்கு) சித்ரா, மதுரை (தெற்கு) சிங்காரவேலு ஆகியோரின் முன்னிலையில் தெப்பகுளம் பகுதி காமராஜர் அரங்கத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து போலீஸ் கமிஷனர் குமார் பேசுகையில், ‘‘சாலை பாதுகாப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆட்டோ, பள்ளிப்பேருந்துகளில் குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளும் நீங்கள், அவர்களை உங்கள் குழந்தைகளாக பாவித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும்பொழுது சீருடையுடன் இருக்க வேண்டும். ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். மதுரையில் சாலை விபத்தினை குறைப்பதற்கு தாங்கள் அனைவரும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவேண்டும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

இதில் கலந்து கொண்ட வாகன ஓட்டிகளுக்கு சாலைபாதுகாப்பு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆட்டோ, பள்ளி வாகனங்கள், டாக்ஸி, அரசு போக்குவரத்துகழகம் ஆகியவற்றின் ஓட்டுனர்கள், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் வரலெட்சுமி, போக்குவரத்து கழக பயிற்றுநர் ஜான்வெஸ்லி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Government ,Commissioner ,Shanmugasundaram ,Madurai Freight ,Transport Commissioner ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும்...