×

சுவற்றில் இயற்கை காட்சிகள் 525 தொழிலாளர்கள் பணி நீக்கம் கூடாது

கோவை, ஆக.30: கோவை மாநகராட்சியில் 100 வார்டில் பல ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் ஒப்பந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தூய்மை பணிகள் ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்க வேண்டும். வேலையில் இருந்து யாரையும் நீக்கம் செய்யக்கூடாது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 525 துப்புரவு தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேரியா, டெங்கு நோய் பாதிப்பு தடுக்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் நீக்கம் செய்ய பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக ஒப்பந்த நிறுவனங்களின் 60 வாகனங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் 30 வாகனங்கள் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. குப்பை சேகரிப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டதால் தொழிலாளர்களுக்கு பணி சுமை அதிகமாகிவிட்டது. வாகனங்களின் மூலமாக அகற்ற வேண்டிய குப்பைகளை தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு அம்பேத்கார் துப்புரவு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறுகையில், ‘‘3,391 தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள், 453 லாரி டிரைவர்கள், கிளீனர்கள், 605 மலேரியா, டெங்கு தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 525 பேரை பணியில் இருந்து நீக்குவதாக கூறுவது சரியல்ல. அனைவரும் பணி வாய்ப்பு தர வேண்டும். இவர்கள் 3 ஆண்டிற்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள். பணி நீக்கம் செய்தால் எங்களின் எதிர்ப்பை காட்டுவோம். ஒப்பந்த நிறுவனத்தினர் 8 மணி நேரம் வேலை தருவதில்லை. காலை 6 மணிக்கு பணிக்கு வந்தால் மதியம் 3.30 மணி வரை வேலை செய்ய வற்புறுத்துகிறார்கள். இல்லாவிட்டால் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்குவதில்லை. வார விடுமுறை தரவில்லை. பணிக்கு வராத நாட்கள் விடுப்பாக எழுதுகிறார்கள். ஒப்பந்த நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகம் சரியாக கையாள வேண்டும்’’ என்றார்.

The post சுவற்றில் இயற்கை காட்சிகள் 525 தொழிலாளர்கள் பணி நீக்கம் கூடாது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Corporation ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்