×

காரமடையில் கனமழை

காரமடை,ஆக.31:காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.இந் நிலையில் நேற்று காலை முதலே சூரியன் சுட்டெரித்து வந்த வேளையில் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் இருட்ட துவங்கியது.இதனால் இதமான சூழல் நிலவியது.இந்நிலையில் திடீரென மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரமடை நகரப்பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையின் காரணமாக காரமடை – தோலம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே மரம் ஒன்று அருகே இருந்த மின்கம்பத்தின் மீது சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன்,மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் மகாலிங்கம், நெடுஞ்சாலைத்துறையினர்,காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தினை அகற்றினர்.இதனால் காரமடை – தோலம்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோல் தோலம்பாளையம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.மேலும், ஆலங்கட்டி மழையும் பெய்ததால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். புட் நோட் MTP04,05 – காரமடை நகரப்பகுதியில் காற்றுடன் பெய்த கன மழை காரணமாக தோலம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

The post காரமடையில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Mettupalayam ,Sirumugai ,Dinakaran ,
× RELATED சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து...