×

ஆலங்குடி அருகே கல்லூரி பஸ் மீது வேன் மோதி டிரைவர் காயம்

வலங்கைமான், ஆக. 31: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காலாச்சேரி மேலத்தெருவை சேர்ந்த சின்னையன் மகன் இளவரசன் (27). இவர் நேற்று முன் தினம் தனியார் கல்லூரியில் மாலைநேர வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவிகளை கல்லூரி பஸ்சில் ஏற்றிக்கொண்டு நீடாமங்கலம் சாலையில் வலங்கைமான் நோக்கி சென்றார். இதேபோல் திருவாரூர் காக்கியாடி மேலத்தெருவை சேர்ந்த சிவமூர்த்தி (37) என்பவர் லோடு வேன் ஓட்டி வந்தார். ஆலங்குடி அருகே கல்லூரி வாகனம் மீது லோடு வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்து டிரைவர் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர். வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆலங்குடி அருகே கல்லூரி பஸ் மீது வேன் மோதி டிரைவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Alangudi ,Walangaiman ,Chinnaiyan Illasasan ,Needamangalam Kalacherry Meletheru, Tiruvarur District ,
× RELATED பாம்பன் சுவாமிகள் கோயில்,...