×

நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூர், ஆக. 31: நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் சாரு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட பனங்குடி ஊராட்சியில் ரூ.33 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், அப்பள்ளி சமையற்கூடத்தினையும், முடிகொண்டான் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.37 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 5.66 கி.மீ நீளத்திற்கு திருமலைராஜன் பாலம் முதல் -செருவளூர் வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பூந்தோட்டம் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் குறித்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதையும், திருமியச்சூரில் ரூ 37 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தையும், போழக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டடங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்யப்பட்டுள்ளதையும், அப்பள்ளி சமையற்கூடத்தையும், கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பில்லூர் ஊராட்சி அண்டகுடியான்தோப்பு பகுதியில் ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை, திருமீயசூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், சிறுபுலியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டடம் ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் சாரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், நன்னிலம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் சாரு உத்தரவிட்டார். ஆய்வில், நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணரமேஷ், ராஜ்குமார், ஒன்றிய பொறியாளர்கள் செல்வசிகாமணி, வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nannilam Union ,Tiruvarur ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...