×

கும்பகோணம் போலீசார் நடவடிக்கை மெலட்டூர் பகுதி விவசாயிகள் வேதனை: காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் நெல் நாற்றங்கால் சேதம்

தஞ்சாவூர், ஆக. 31: தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் பல ஏக்கரில் நெற்பயிர் நாற்றங்கால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பாபநாசம் தாலுகா திருவையாத்துக்குடி பகுதியில் தற்போது சம்பா நடவுக்காக நாற்றங்கால் அமைத்து விதை தெளிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பாய் நாற்றங்கால் அமைத்து பல ஏக்கரில் நெல் விதைத்திருந்தனர். இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து நெல் விதைத்த நாற்றங்காலை சேதப்படுத்தி விட்டு சென்றன. காலையில் விவசாயிகள் வயலுக்கு சென்று நாற்றங்காலை பார்த்தபோது காட்டுப்பன்றிகள் நாற்றங்காலை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதைக்கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் வனத்துறை அதிகாரிகள் வயல்களில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

The post கும்பகோணம் போலீசார் நடவடிக்கை மெலட்டூர் பகுதி விவசாயிகள் வேதனை: காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் நெல் நாற்றங்கால் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam police ,Melatur ,Thanjavur, Va. 31 ,Melatur district, ,Thanjavur district ,Kumbakonam ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...