×

பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 31: .பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம் பேருந்து நிலையம் பெரியார் சதுக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளங்கோ தலைமை தாங்கினார்சுந்தரவடிவேல், சிவக்குமார், ராஜ்குமார், சதாசிவம், காமராஜ்,கண்னன்,அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அற்புதராஜ் நன்றி கூறினார்.இக்கூட்டத்தில் பூதலூர் வட்டாட்சியர் தங்குவதற்கு என கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வட்டாட்சியர் கட்டாயம் தங்கிட வேண்டும். அக்குடியிருப்பின் ஒரு பகுதியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்.

பூதலூர் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் கரைகள்,ஆனந்தகாவேரி கரைகளை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட சுகாதார நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஆகிவை இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. வரும் 4ம்தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

The post பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Boothalur People's Rights Federation ,Thirukkadupalli ,Bus Stand Periyar Square ,Dinakaran ,
× RELATED கோவிலடி சிவன் கோயிலில் பெருஞ்சாந்தி பெருவிழா