×

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் கொடை விழா கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் வலம்

ஏரல், ஆக. 31: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழாவில் அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா, கடந்த 22ம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 27ம் தேதி இரவு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சி, 28ம் தேதி இரவு அம்மன் மாக்காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சி நடந்தது.

கோயில் கொடை விழா, நேற்று முன்தினம் நடந்தது. அன்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் சிறப்பு பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு வில்லிசை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர். நள்ளிரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், தொடர்ந்து கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடந்தது. இதையடுத்து அம்மன் நகர் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கொடை விழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று காலையில் வெளியே உலா சென்ற அம்மன் திருக்கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. கொடை விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் விழாக் குழுவினர் செய்து இருந்தனர்.

The post சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் கொடை விழா கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் வலம் appeared first on Dinakaran.

Tags : Siruthondanallur Muthumalai Amman ,Temple ,Amman Nagar Valam ,Karpaka Pon Chapparam ,Aral ,Sirutondanallur ,Muthumalai Amman Temple ,Amman Karpaka ,Pon Chapparam ,Sirutondanallur Muthumalai Amman Temple ,Amman Nagar ,
× RELATED தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு