×

கறம்பக்குடியில் பெயிண்டருக்கு கத்திரிக்கோல் குத்து டைலர் குடும்பத்தினர் ஆவேசம்

கறம்பக்குடி ஆக. 31: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சிவா (32). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் ராமு. டைலர். இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் பல ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், சிவா கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கும், ராமுவுக்கும் மீண்டும் தகறாறு ஏற்பட்டது. இந்நிலையில், ராமு, அவரது மனைவி அஞ்சம்மாள், மகன் பிரகாஷ் ஆகிய மூவரும் வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்து சிவாவை குத்தினர். இதை தடுக்க வந்த சிவாவின் சின்னம்மா தமிழ்செல்விக்கும் கத்திரிக்கோல் குத்து விழுந்தது.

இதில் படுகாயமடைந்த இருவரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சிவா அளித்த புகாரின்பேரில் ராமு, அஞ்சம்மாள், பிரகாஷ் ஆகிய மூவர் மீதும் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கறம்பக்குடியில் பெயிண்டருக்கு கத்திரிக்கோல் குத்து டைலர் குடும்பத்தினர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Tyler ,Siva ,Karambakkudi Agraharam ,Pudukottai district ,
× RELATED கறம்பக்குடியில் அனுமதியின்றி...