×

66வது ஆண்டு நினைவு தினம் என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிப்பு

நாகர்கோவில், ஆக.31 : கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் 66வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைவாணர் நற்பணி மன்றம் சார்பில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு அவரது பேரன்கள் கிருஷ்ணசந்திரன், கிருஷ்ணன், ராஜன் ஆகியோர் மாலை அணிவித்தனர். மன்ற நிர்வாகிகள் தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், கி.குமார், நித்தியானந்தன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் குற்றாலம் பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை, வக்கீல் மனாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர். அதிமுகவினர் எம்எல்ஏ தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜெஸிம், பொன். சுந்தர்நாத், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன், அணிகளின் அமைப்பாளர்கள் சுகுமாறன், வக்கீல் சுந்தரம், ராஜாராம், கவுன்சிலர்கள் அட்சயா கண்ணன், லிஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் ஒழுகினசேரியில் என்.எஸ். கிருஷ்ணன் பெயரில் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் என்.எஸ். கிருஷ்ணன் படம் வைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ்குமார், ஜூலியட் பாக்கியரதி ஆகியோர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கலைவாணர் சிலைக்கு பாஜவினர் எம்.ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜ மாவட்ட பொருளாளர் முத்துராமன், மண்டல பார்வையாளர் நாகராஜன், கவுன்சிலர் ரோசிட்டா திருமால், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் ஜாக்சன், ஓபிசி பிரிவு பொது செயலாளர் தங்கம், மண்டல தலைவர் சிவசீலன், முன்னாள் பொருளாளர் திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 66வது ஆண்டு நினைவு தினம் என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : N.S. Garlanding ,Krishna ,Nagercoil ,Kalaivanar ,N.S. Krishna ,
× RELATED கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்