×

நாங்கள் நினைத்தபடி நிலவில் நீர், ஆக்சிஜன் உள்ளது உறுதி: சந்திரயான்-3 உந்துவிசை இயக்குனர் பேட்டி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சந்திரயான்- 3 வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் சந்திரயான் 3 லேண்டர் உந்துவிசை இயக்குனர் மோகன்குமார் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சந்திரயான்-3 எங்களது முந்தைய கணிப்புகளின்படி நிலவின் தென் துருவத்தில் நீர், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் இருக்கும் என்பது தற்போதைய ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது.
இது போன்ற தகவல்கள் 14 நாட்கள் நமக்கு ரோவர் அளிக்கும். தற்போது ரோவர் நிலவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, நிலவின் வெப்பநிலை, தனிமங்கள், இவற்றை ஆய்வு செய்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அளித்து வருகிறது. நிலவில் 1 நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்கு சமம். ரோவர் சூரியஒளி சக்தியை கொண்டு இயங்குவதால், 14 நாட்களுக்கு பிறகு நிலவில் இருள் சூழும்போது ரோவர் செயல்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாங்கள் நினைத்தபடி நிலவில் நீர், ஆக்சிஜன் உள்ளது உறுதி: சந்திரயான்-3 உந்துவிசை இயக்குனர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chandrayaan ,3 ,Chandrayaan- 3 ,Uttieswaran Temple ,Private ,School ,Sirkazhi, Mayiladuthara District ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...