×

ஜி.கே.மூப்பனாரின் 22ம் ஆண்டு நினைவு தினம்: கவர்னர் தமிழிசை, அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

சென்னை: ஜி.கே.மூப்பனாரின் 22ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை, ஜெயக்குமார், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 22ம் ஆண்டு நினைவு தினம் சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தின் பின்புறம் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9.30 மணி அளவில் ஜி.கே. மூப்பனாரின் மகனும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசன், தந்தையின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், முன்னாள் எம்.பி ஜெயவர்தன், தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதி உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post ஜி.கே.மூப்பனாரின் 22ம் ஆண்டு நினைவு தினம்: கவர்னர் தமிழிசை, அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : GK Moopanar ,Governor Tamilisai ,Annamalai ,GK Vasan ,Chennai ,Jayakumar ,
× RELATED தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது...