×

7.5% ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது: ராமதாஸ் கல்லூரிகளுக்கு கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 7.5% ஒதுக்கீட்டின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பான்மையினர், அவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டு விட்ட போதிலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தங்களின் இடத்தை உறுதி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். காரணம், தொடர்புடைய தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் கேட்டு நெருக்கடி தருவது தான்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் கல்லூரிகளின் நிர்வாகங்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். எது எப்படி இருந்தாலும், அரசு பள்ளி மாணவர்களிடமிருந்து தனியார் கல்லூரி நிர்வாகங்கள் எந்த வகையிலும் பணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

The post 7.5% ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது: ராமதாஸ் கல்லூரிகளுக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,PAMC ,Ramadas ,
× RELATED வெப்ப அலை வீசுவதால் கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு: பாமக தலைமை அறிவிப்பு