×

கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்: 8 நாட்களில் ரூ.665 கோடிக்கு மது விற்பனை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8 நாட்களில் ரூ.665 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகி உள்ளன. கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகள் கேரள மதுபான விற்பனைக் கழகத்தின் சில்லரை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளா முழுவதும் 320 மதுக்கடைகள் உள்ளன. இது தவிர பார்கள் மூலமும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் தான் மது விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்த வருடமும் வழக்கம்போல ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மது விற்பனை சூடு பிடித்தது. ஓணம் பண்டிகை தினமான நேற்று முன்தினம் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதற்கு முன்தினம் வரை 8 நாளில் மட்டும் ரூ.665 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையானது. இந்த நாட்களில் கடந்த வருடம் நடந்த விற்பனை ரூ.624 கோடியாகும். ஓணத்திற்கு முன்தினம் ஒரு நாளில் மட்டும் விற்பனை ரூ.121 கோடியை தாண்டியது. பார்களில் நடந்த விற்பனையையும் சேர்த்தால் தொகை மேலும் அதிகரிக்கும்.

The post கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்: 8 நாட்களில் ரூ.665 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.

Tags : Onam celebrations ,Kerala ,Thiruvananthapuram ,Onam festival.… ,Onam ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...