×

நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கான தேர்வுக்கு இணையத்தில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்

சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் (போட்டி தேர்வுகள் பிரிவு) சிறப்பு திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-24க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கான தேர்வுக்கு இணையத்தில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nan Muthvan ,CHENNAI ,Tamil Nadu Skill Development Corporation ,Mootuvan ,Dinakaran ,
× RELATED நான் முதல்வன் திட்டம் உதவியால் ஐஎப்எஸ் தேர்வில் தஞ்சை வாலிபர் வெற்றி