×

பிஐபியின் முதன்மை இயக்குநர் ஜெனரல் நியமனம்

புதுடெல்லி: மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி மணீஷ் தேசாய், பத்திரிகை தகவல் பணியகத்தின்(பிஐபி) முதன்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1989ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர் அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளராகவும் இருப்பார். இன்று ஓய்வுபெறும் தற்போதைய முதன்மை இயக்குநர் ஜெனரல் ராஜேஷ் மல்ஹோத்ராவிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொண்டு நாளை பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மணீஷ் ​​தேசாய் மத்திய தகவல் தொடர்புப் பணியகத்தின் தலைமை இயக்குநராக உள்ளார். இதே போல் மூத்த ஐஐஎஸ் அதிகாரி பூபேந்திர கைந்தோலாவை செய்தித்தாள்களின் பதிவாளர் (ஆர்என்ஐ) பத்திரிகை பதிவாளராக ஒன்றிய அரசு நியமித்து உள்ளது.

The post பிஐபியின் முதன்மை இயக்குநர் ஜெனரல் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Principal Director General ,PIP ,New Delhi ,Indian ,Manish Desai ,Director General ,Bureau of Press Information ,BIP ,Dinakaran ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...