×

உரிய வழிகாட்டு நெறிமுறை வேண்டும்; நீதிமன்றங்களில் மரியாதை குறைவாக நடத்தப்படும் பெண் வக்கீல்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: வழக்கு வாதங்களின் போது பெண் வழக்கறிஞர்கள் மரியாதை குறைவாக நடத்தப்படும் விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கடிதம் எழுதியுள்ளார். மூத்த பெண் வழக்கறிஞராக இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பல வழக்குகளிலும் ஆஜராகி வருகிறார்.

இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” உச்ச நீதிமன்றத்தில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது, பெண்களை கண்ணியக் குறைவாக குறிப்பிடும் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். அதேப்போன்று நீதிமன்றங்களில் நடக்கும் வாதங்களின் போது பெண் வழக்கறிஞர்களை சக ஆண் வழக்கறிஞர்கள் பல நேரங்களில் மரியாதை குறைவாக நடத்துகின்றனர்.

அதுகுறித்தும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும். அதே நேரத்தில் பெண்கள் குறித்த எத்தகைய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட குறிப்பு புத்தகத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நீங்கள் வெளியிட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

The post உரிய வழிகாட்டு நெறிமுறை வேண்டும்; நீதிமன்றங்களில் மரியாதை குறைவாக நடத்தப்படும் பெண் வக்கீல்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED தமிழ் உள்ளிட்ட மொழியில் கேசவானந்த...