×

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டமா?: பா.ஜ அறிவிப்பால் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் துணை முதல்வராக இருந்த சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் கடந்த 6 மாதமாக சிறையில் உள்ளார். இந்த நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் இந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என்று பா.ஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது,’ மதுபான ஊழல் வழக்கில் முக்கிய நபர் முதல்வர் கெஜ்ரிவாலும் சிறையில் இருக்கக்கூடும் என்று அஞ்சுவதால் ஆம் ஆத்மி திகைப்படைந்துள்ளது. கெஜ்ரிவால் தான் சட்டத்திற்கு மேலானவர் என்று நினைத்தார். ஆனால் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதே செய்தி. ஒரு அதிகாரி தவறு செய்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய நடவடிக்கை ஊழல் குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை குறைக்காது’ என்று தெரிவித்தார்.

The post டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டமா?: பா.ஜ அறிவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,BJP ,New Delhi ,Enforcement Directorate ,Sisodia ,Deputy Chief Minister ,Delhi ,
× RELATED 3 மாநிலத்தில் பாஜ வெற்றி எதிரொலி;...