×

ரூ.1 கோடி மரங்களை வெட்டிய அதிமுக பிரமுகர் கைது

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காட்டம்முண்டி ஊராட்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்பரசு. இவருடைய மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் முள் செடிகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதை பயன்படுத்திக் கொண்டு அன்பரசு, வனப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்களை வெட்டி விற்பனை செய்து விட்டாராம். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கடந்த ஜூன் மாதம் அன்பரசுவின் மீது வழக்குப்பதிவு செய்து, அன்பரசுவிடம் வேலை செய்த ஜேசிபி ஆபரேட்டர் திருக்கோவிலூர் அடுத்த புண்ணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அசோகன்(24) என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை வனக்காப்பாளர் சுல்தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அலுவலகத்தில் பணிபுரிந்த 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை அடையாறு பகுதியில் பதுங்கி இருந்த அதிமுக பிரமுகர் அன்பரசுவை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ரூ.1 கோடி மரங்களை வெட்டிய அதிமுக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Dandarampatu ,Thiruvannamalai district ,Dandaramputu ,Kathamundi ,Chief Minister ,
× RELATED (தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு...