×

கிணற்றில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் மீட்பு

சின்னமனூர்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த (45). பிளம்பிங் வேலை செய்யும் எலெக்ட்ரீசியன். இவர், சின்னமனூர் அருகே உள்ள எல்லப்பட்டியில் பாலு என்பவருக்கு சொந்தமான 600 அடி ஆழ கிணற்றில் பழுதான மோட்டார் சீரமைக்க நேற்று காலை சென்றார். கிணற்றுக்குள் உதவியாளர் தங்கபாண்டியனுடன் இறங்கிய ஆனந்த், பழுதான மோட்டாரை அவிழ்த்து மேலே தூக்கி தரைக்கு கொண்டு வந்தனர். தரையில் மோட்டார் பழுதை சீரமைத்த பின் மீண்டும் அதை கீழே இறக்கி கிணற்றில் பொருத்தினர். பணிகள் முடிந்த நிலையில் முதலில் ஆனந்த் கிணற்றின் படிக்கட்டு வழியாக மேலேறி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உதவியாளர் தங்கப்பாண்டியன் சின்னமனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி எலெக்ட்ரீசியன் ஆனந்தனை மீட்டனர். கிணற்றில் இருந்த தங்கப்பாண்டியனையும் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். கிணற்றில் விழுந்ததில் காயமடைந்த ஆனந்தனை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Ananda ,Amambam ,Theni District, Uttamapalayam ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்