×

ஓ.பி.எஸ். மீதான வழக்கு: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. ஓ.பி.எஸ். விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஓபிஎஸ், அவரது மனைவி, மகன்கள், மகள், சகோதரர்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

The post ஓ.பி.எஸ். மீதான வழக்கு: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai High Court ,Bannerselvath ,High Court ,Dinakaran ,
× RELATED F4 கார் பந்தயம்: தனியார் அமைப்பு உடனான...