×

இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற பிடே உலகக்கோப்பை செஸ் போட்டியில், பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம் கிடைத்தது. அதற்காக வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு, தமிழ்நாடு விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள், தனியார் பள்ளி மாணவர்களும் வரவேற்க திருண்டு இருந்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இது குறித்து X வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; தமிழ்நாட்டின் எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய அயராத உழைப்பாலும் – தாயார் ஊட்டிய தன்னம்பிக்கையாலும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற பிடே உலகக்கோப்பை 2023-ல் 2-ஆம் இடத்தை பிடித்துள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்கினார். செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய ஒன்றியத்தில் செஸ் விளையாட்டின் முகமாகத் திகழும் தமிழ்நாடு, உலக அரங்கிலும் தனி இடத்தை பிடிக்க காரணமான தம்பி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Prakhananda ,Prakhanandas ,Minister ,Udhayanidi Stalin ,Chennai ,Pte World Cup Chess ,Azerbaijan ,Bhaku ,Prakhjanandah ,Silverware ,Prakhjananda ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...