×

சென்னை கொளத்தூர் தொகுதியில் மின்வாரிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்வர் ஆய்வு நடத்தி வருகிறார். பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியையும் ஆய்வு செய்கிறார். பணிகளை வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வருகை தந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக எஸ்.ஆர்.டி. வடக்கு தெருவில் இருக்கக்கூடிய தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மின் மாற்றியாக கட்டப்பட்டு வரக்கூடிய கட்டுமான பணிகளை தற்பொழுது பார்வையிட்டார்,  அதனை தொடர்ந்து ஜவகர் நகர், பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் அமைக்கப்பட்டு வரக்கூடிய மழை நீர் சேகரிக்கக்கூடிய மையத்தினை தற்பொழுது பார்வையிட்டும் வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியின் பொழுது சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா துணை மேயர் மற்றும் அதே போன்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் இருக்கின்றனர். சென்னையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாடி, திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

The post சென்னை கொளத்தூர் தொகுதியில் மின்வாரிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai Kolathur ,G.K. stalin ,Chennai ,Mukhera ,Badi ,CV ,G.K. Nagar ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...