×

சென்னை புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை..!!

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் மழை பரவலாக மழை பெய்கிறது. பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.

The post சென்னை புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ponneri ,Cholavaram ,Sengunram ,Puzhal ,
× RELATED சூலூர்பேட்டையில் இருந்து சென்னை...