×

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே விலைவாசி உயர்வால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டணத்தை உயர்த்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.

இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமலும், தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமலும் சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எந்த வகையில் நியாயம். உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், காலாவதியான சுங்க சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும். சுங்க கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால், அனைத்து சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMUDK ,Vijayakanth ,Chennai ,Dindigul ,Trichy ,Salem ,Mettupatti ,Ulundurpet ,Madurai ,Tuticorin ,Demudika ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27...