×

பெங்களூரு அருகே வனப்பகுதியில் சட்ட விரோதமாக சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி: வனத்துறை துப்பக்கிச்சூட்டில் ஒருவர் பலி

பெங்களூரு: பெங்களூரு அருகே பன்னேருகட்டா வனப்பகுதியில் சட்ட விரோதமாக சந்தன மரத்தை வெட்டியதாக கூறி கும்பல் ஒன்றின் மீது வனத்துறை துப்பக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், கோலார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பன்னேருகட்டா வனப்பகுதியில் இன்று அதிகாலையில் சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது இருவர் சந்தன மரங்களை வெட்டுவதை பார்த்தனர். உடனசியாக அவர்களை சரணடையுமாரு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி அங்கிருந்த புதரில் மறைந்திருந்தனர்.

இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பயந்துபோன ஒருவர் மரம் வெட்ட பயன்படுத்திய கத்தியை கொண்டு வனத்துறை அதிகாரிகளை தாக்க முயன்றார். இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் தங்களை தற்காத்துகொள்ள துப்பாக்கி சூடு நடத்தபட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனை பார்த்த மற்றொறு நபர் காட்டுக்குள் ஓடி மறைந்துள்ளார்.

இதனை அடுத்து துப்பக்கிசூட்டில் கோலார் மாவட்டத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவர் இறந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. தொடர்ந்து தப்பியோடிய மற்றொரு குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.

The post பெங்களூரு அருகே வனப்பகுதியில் சட்ட விரோதமாக சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி: வனத்துறை துப்பக்கிச்சூட்டில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Bangalore Bengaluru ,Bannerukata forest ,Bengaluru ,Dinakaran ,
× RELATED சூரியனை ஆய்வு செய்வதற்காக...