×

முதல் டி.20 போட்டியில் இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து மோதல்

செஸ்டர் லீ ஸ்டிரிட்: சவுத்தி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு 4 டி.20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல்டி.20 போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட் மைதானத்தில் இன்று நடக்கிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்களும், ஜோர்டன், ஆல்ரவுண்டர் ராம்கரன், அடில்ரஷித் உள்ளிட்டபவுலர்களும் உள்ளனர். நியூசிலாந்து அணியில் டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன்,ஃபின் ஆலன் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். பவுலிங்கில் ஜேமீசன், மாட் ஹென்றி, பெர்குசன், சுழலில் மிட்செல் சான்ட்னர், இஷ்சோதி அச்சுறுத்தலாம். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 14ல் இங்கிலாந்தும், 8ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.

The post முதல் டி.20 போட்டியில் இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து மோதல் appeared first on Dinakaran.

Tags : England ,New Zealand ,T20 ,Chester Lee ,Street ,Southee ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு