
- மரியாதைக்குரியவர்
- தலப்பாடி கே.
- விநாயகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஓனம் கோலகலம்
- திருவந்தாணி:
- ஓணம்
- தலப்பதி விநாயகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- திருத்தணி
- தின மலர்
- விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருத்தணி: திருத்தணியில் உள்ள தளபதி விநாயகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருத்தணியில் உள்ள தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முன்னதாக கல்லூரியில் தாளாளர் டாக்டர் எஸ்.பாலாஜி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.வேதநாயகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் முனைவர் எஸ்.பொற்செல்வி வரவேற்று பேசினார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடைகள் அணிந்தும் கதகளி நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக மாணவிகள் வரைந்திருந்த அத்தப் பூ கோலம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஒரு மாணவி மாபலி மன்னர் வேடம் அணிந்து அசத்தினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பெற்றோர், கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலாகலம் appeared first on Dinakaran.