×

அல்ட்ரா வயலட் எஃப் 77 ஸ்பேஸ் எடிஷன்

அல்ட்ரா வயலட் நிறுவனம் எஃப் 77 ஸ்பேஸ் எடிஷன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சந்திரயான் விண்கலம்-3 ஏவப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் ஆகியுள்ளது. ஏரோஸ்பேஸ் தரத்தில் 7075 கிரேடு அலுமினியம் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பெயிண்ட், அல்ட்ரா வயலட் கதிர் வீச்சால் பாதிக்கப்படாது. பைக் சாவியும் உயர்தர அலுமினியத்தால்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 40.5 பிஎச்பி பவரையும் 100 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 10 கிலோ வாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 307 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்திரயான் ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.5.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post அல்ட்ரா வயலட் எஃப் 77 ஸ்பேஸ் எடிஷன் appeared first on Dinakaran.

Tags : Ultra Violet Company ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...