×

பூமியை அழித்து விட்டார்கள், அடுத்து நிலவை அழிக்க பாஜகவினர் தயாராகிவிட்டனர்: சீமான் விமர்சனம்

ஈரோடு: பூமியை அழித்து விட்டார்கள், அடுத்து நிலவை அழிக்க பாஜகவினர் தயாராகிவிட்டனர் என சீமான் விமர்சனம் செய்தார். ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; ஒன்றிய அரசு சிலிண்டர் விலை ரூ.200-ஐ குறைத்துள்ளது. இது மக்கள் மீதான அக்கறை இல்லை. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏன் ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்கவில்லை?.

10 ஆண்டு ஆட்சியில் உள்ள பாஜக என்னை எதிர்த்து போட்டியிட்டு, ஒரு சதவிகித வாக்கு அதிகமாக பெற முடியுமா? 40 தொகுதியிலும் இங்கு நிற்க பாஜகவுக்கு ஆள் இருக்கா?. நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் காலில் விழுந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் தமிழ்நாட்டின் பெருமை. கலைகளின் அடையாளம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பூமியை அழித்து விட்டார்கள், அடுத்து நிலவை அழிக்க பாஜகவினர் தயாராகிவிட்டனர். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பிரதமர் மோடி பெயரிட்டது குறித்து என்றும் விமர்சனம் செய்தார்.

The post பூமியை அழித்து விட்டார்கள், அடுத்து நிலவை அழிக்க பாஜகவினர் தயாராகிவிட்டனர்: சீமான் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : earth ,Pajakavinar ,Erode ,Seeman ,Erode District ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்