×

சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.8.2023) முகாம் அலுவலகத்தில், அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக உயரிய ஊக்கத் தொகையான 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அஜர்பைஜானில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, இன்று காலை சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் காசோலையை பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். உலக செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று பிரக்ஞானந்தா சாதனை படைத்திருந்தார். உலக செஸ் தொடரில் வென்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றபின், இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன், தமிழ்நாடு இளம் வீரர் பிரக்ஞானந்தா மோதி வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அரை இறுதிக்கு முன்னேறிய இரண்டாம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

இதையடுத்து பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். இருவரும் விளையாடிய இரண்டு போட்டியும் டிராவில் முடிந்தது. இதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பரபரப்பான டை பிரேக்கர் ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இரண்டு வடிவங்களில் மூன்று நாட்கள் மற்றும் நான்கு விளையாட்டுகளுக்குப் பிறகு, மேக்னஸ் கார்ல்சன் தனது வாழ்க்கையில் முதல் முறையாக FIDE உலகக் கோப்பையை வென்றார் . கார்ல்சென் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் பிரக்ஞானந்தா அவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Master ,Praggnananda ,CM ,G.K. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,G.K. Stalin ,Azerbaijan ,FIDE World ,Prakhananda ,B.C. G.K. ,
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!