×

டெல்லியில் நள்ளிரவில் அமேசான் மேலாளர் சுட்டுக் கொலை: தலையில் தோட்டா பாய்ந்ததில் ஹர்பிரீத் கில் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் நள்ளிரவில் அமேசான் நிறுவனத்தின் மேலாளர் ஹர்பிரீத் கில் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹர்பிரீத் கில் தனது நண்பர் கோவிந்த் சிங் என்பவருடன் டெல்லியில் சுபாஷ் விஹார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் குறுகிய தெரு ஒன்றில் சென்றபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தடுத்து நிறுத்தியது.

பின்னர் அவர்கள் இருவரையும் நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுட்ட மர்ம கும்பல் தப்பியோடிவிட்டது. தலையில் தோட்டா பாய்ந்ததால் அமேசான் மேலாளர் ஹர்பிரீத் கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடது காதில் குண்டு பாய்ந்த நிலையில் படுகாயமடைந்த கோவிந்த் சிங் லோக்நாயக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளிகளை டெல்லி காவல்துறை தேடி வருகிறது.

 

 

The post டெல்லியில் நள்ளிரவில் அமேசான் மேலாளர் சுட்டுக் கொலை: தலையில் தோட்டா பாய்ந்ததில் ஹர்பிரீத் கில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Amazon ,Delhi ,Harpreet Gill ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...