×

கோவையில் தேசிய இளைஞர் திருவிழா தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி: உற்சாகமாக கலந்து கொண்ட மாணவர்கள்

கோவை: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில் “இளைஞர் திருவிழா 2023-24′” மூலம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாரத்தான் ஒட்டம் நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவ மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.நேரு விளையாட்டு அரங்கில் துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டம் அவிநாசி சாலை, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணா சிலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பலர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் , சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

The post கோவையில் தேசிய இளைஞர் திருவிழா தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி: உற்சாகமாக கலந்து கொண்ட மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Marathon ,National Youth Festival Day ,Goa ,Govai ,National Youth Day ,Temple ,Dinakaran ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...