
சென்னை: சென்னையில் மாநில கல்விக்கொள்கை குழு கூட்டம் தொடங்கியது. கல்விக்கொள்கை தொடர்பான ஆய்வு அறிக்கைக்கு குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற கூட்டம் நடைபெற்று தொடங்கி வருகிறது. மாநில கல்விக்கொள்கை குறித்த ஆய்வறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழு அடுத்த மாதம் தாக்கல் செய்கிறது.
வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கியதாக கல்விக் கொள்கை தயாரிக்கப்படும் என்றும், பாலியல் கல்வி குறித்த அம்சமும் வரைவு அறிக்கையில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கையும் அமையும் என்று கூறப்பட்டது.
இதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆகியோர் உள்ளனர்.
இந்த குழுவினர் மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
The post சென்னையில் மாநில கல்விக்கொள்கை குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.