×

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கார்களில் கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகிகள், 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கைது

தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு 2 கார்களில் கஞ்சா கடத்தி வந்த பாஜக, பாமக நிர்வாகிகள் உள்ளிட்ட 16 பேர் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் 2 இனோவா கார்களை மறித்து சோதனையிட்ட போலீசார் அதில் இருந்து 228 கிலோ கஞ்சா பண்டில்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தியவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்களில் ஒருவர் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி மணிகண்டன், மற்றொருவர் தூத்துக்குடி பாமக மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா ஆகியோர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் மேலும் 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து 2 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் இந்த கும்பல் ஆந்திராவில் இருந்து கார்களில் தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்து பின்னர் அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தியதும் தெரியவந்தது. கஞ்சா கடத்தலுக்காக சட்ட கல்லூரி மாணவி திவானியா, ஸ்ரீமதி ஆகிய 2 பெண்களை இந்த கும்பல் பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 16 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைந்தனர்.

The post ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கார்களில் கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகிகள், 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thoothukudi ,bajaka ,bambaga ,Bamaga ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை...