×

உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு..!!

சென்னை: உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள், பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்து கொடுத்து பிரக்ஞானந்தாவை வரவேற்றனர். மலர்களை தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க திறந்தவெளி வாகனம் மூலம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா அழைத்துச் செல்லப்படுகிறார். அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். 2-ம் இடம் பிடித்து பிரக்ஞானந்தா நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

The post உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pragnananda ,Chennai ,World Chess Championship ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...