×

முத்தரசநல்லூர் பள்ளியில் காலை உணவு திட்டம்

தில்லைநகர், ஆக.30: முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை திருநாவுக்கரசர் எம்பி துவக்கி வைத்தார்.திருச்சி எம்பி திருநாவுக்கரசர் அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் கல்வி அலுவலர் மருதநாயகம், பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சோபியா விமலாராணி, அந்தநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கனகராஜ், . மாவட்ட நிர்வாகிகள் எழிலரசன், கதிர்வேல், காவேரி வேலு, வடக்கு மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட நிர்வாகிகள் அர்ஜுன், லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

The post முத்தரசநல்லூர் பள்ளியில் காலை உணவு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Mutharasanallur School ,Thillainagar ,Thirunavukkarasar ,Muttharasanallur Panchayat Union Primary School ,Trichy MP ,Muttharasanallur school ,
× RELATED டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...