×

தற்காலிக பணியாளர்கள் சென்னை பயணம்

முத்துப்பேட்டை, ஆக. 30: முத்துப்பேட்டை சரகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் சுமார் 20க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க கோரி சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன் இன்று (30ம் தேதி) உண்ணாவிரதம் நடைபெறுகிறது. உண்ணாவிரதம் போராட்டத்தில் பங்கேற்க முத்துப்பேட்டை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் பணியாற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாகனங்கள் மூலம் புறப்பட்டு சென்றனர்.

The post தற்காலிக பணியாளர்கள் சென்னை பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muthupet ,Public Works Department ,Water Resources Department ,Muthuppet ,Dinakaran ,
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...