×

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

ஓமலூர், ஆக.30: ஓமலூர் அருகே செம்மாண்டபட்டி மேல்தேருவை சேர்ந்தவர் சண்முகம் (62). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடைக்கு, 6வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது கடைக்கு உள்ளே வா, நிறைய மிட்டாய் தருகிறேன் என உள்ள அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமி, அழுதுகொண்டே உடல் வலிப்பதாக கூறியுள்ளார். மேலும், கடையில் நடந்த சம்பவம் குறித்தும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் சண்முகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Omalur ,Shanmugam ,Semmandapatti Meltheru ,
× RELATED ஓமலூர் உட்கோட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது