×

3 மாதம் வரை கெடாது செப்டம்பர் 7ம்தேதி முதல் டிலைட் பால் விற்பனை

புதுக்கோட்டை, ஆக.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்டம்பர் 7ம்தேதி முதல் டிலைட் பால் விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) கிரீன் மேஜிக் கொழுப்பு சத்து 4.5சதவீதம் இதர சத்து 8.5 சதவீதம்தரம் கொண்ட விற்பனை செய்யப்பட்டுவரும் பால் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின்படி சமநிலைப்படுத்தப்படாமல் 30.08.2023 முதல் விற்பனை செய்யப்படுகிறது. தற்பொழுது விற்பனை செய்யப்பட்டுவரும் பசும்பால் கொழுப்பு சத்து 3.5சதவீதம் இதர சத்து 8.5சதவீதம் தரம் கொண்ட (டிலைட் பால்) என்ற பெயரில் 3 மாதம் வரை கெடாத 7.9.2023 முதல் விற்பனை செய்யப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post 3 மாதம் வரை கெடாது செப்டம்பர் 7ம்தேதி முதல் டிலைட் பால் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Delight ,Pudukottai ,Mercy Ramya ,Pudukottai district ,
× RELATED தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை...