×

பொதுமக்கள் கோரிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்தால் புகார் தெரிவிக்கலாம்

நாகப்பட்டினம்,ஆக.30: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய கையூட்டு கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நாகப்பட்டினம் மண்டலத்தில் விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் பணம் கையூட்டாக கொடுக்க வேண்டாம். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் பணியாளர்கள் கையூட்டு பெற்றாலோ, முறைகேடுகள் காணப்பட்டாலோ விவசாயிகள் 94878 08392 என்ற செல்போன் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post பொதுமக்கள் கோரிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்தால் புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Janidam Varghese ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு...