×

கீழ்வேளூர் அருகே 45 மணிநேரம் ரயில்வேகேட் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அவதி: பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு

கீழ்வேளூர், ஆக.30: கீழ்வேளூர் அருகே 45 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்-கச்சனம் சாலையில் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் ரயில் நிலையம் நாகை-திருவாரூர் ரயில் நிலையங்களுக்கு நடுவில் ரயில்கள் கிராசிங் செய்வதற்கு ஏதுவாக மூன்று ரயில் பாதைகள் உள்ளது.நாகை-திருவாரூர் ரயில் மார்க்கத்தில் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்ற ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் சரக்கு ரயில் சென்று வருகிறது.

மேலும் நாகை, காரைக்கால், வேளாங்கண்ணிக்கு ஏராளமான பயணிகள் ரயில் சென்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு பாசஞ்சர் ரயில் வருவதற்கு முன் கீழ்வேளூர் ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக செல்லும் ஒரு சரக்கு ரயில் வந்து நின்றது. அதன் பின் காரைக்காலுக்கு செல்லும் பயணிகள் ரயில் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் வந்து நின்றது. இந்த இரண்டு ரயில்கள் வந்ததையொட்டி 25 நிமிட நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டது. காலை 9 மணி என்பது பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரம்.

தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் முக்கியமான நேரம் என்பதால் கேட்டின் இரண்டு பக்கமும் மாணவர்கள் ஏராளமானவர்கள் பள்ளி தொடங்கும் நேரம் வரை ரயில்வேகேட்டில் காத்திருந்தனர். மேலும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் சுமார் அரை மணி நேரம் ரயில்வேகேட் அருகே காலையிலேயே சுட்டெரித்த வெயிலில் காத்து நின்றனர். ரயில்வேகேட் பூட்டப்பட்ட அந்த நேரத்தில் 300க்கு மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், 6 பேருந்துகள் நின்றது. ரயில்வே நிர்வாகம் காலை நேரத்தில் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் கிராசிங்கை தவிர்க்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், வேலைக்கு செல்பவர்கள் ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post கீழ்வேளூர் அருகே 45 மணிநேரம் ரயில்வேகேட் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அவதி: பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Kilivelur ,Kilyvellur ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...