×

ரூ.60 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

காரிமங்கலம், ஆக.30: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடப்பது வழக்கம். சந்தைக்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 500 மாடுகள், 750 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.இதில் ரூ.60 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.30 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. அதேபோல் ரூ.5 லட்சத்திற்கு நாட்டுக்கோழி விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை நேற்று அதிகரித்து இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால் ஆடுகள் விற்பனை கனிசமான அளவில் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.60 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Dharmapuri District, ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி