×

டூவிலர் விபத்தில் முதியவர் பலி

 

தேவதானப்பட்டி, ஆக. 30: தேவதானப்பட்டி தெற்கு தெரு மதுரைவீரன்கோவில்தெருவைச் சேர்ந்தவர் பிச்சை(57). இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் தெற்கு தெரு பகுதியில் இருந்து பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற டூவிலர் பிச்சை மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பிச்சை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த பிச்சை சிறுது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் டூவிலரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய ஆண்டிபட்டி அருகே ரோசனப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி(33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவிலர் விபத்தில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Touviler ,Devadanapatti ,Pichai ,Devadanapatti South Street, Madurai Veerankoil Street ,
× RELATED சில்வார்பட்டியில் ஆணையாளர் ஆய்வு