×

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.30: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை பயிற்சி துணை இயக்குநர் பாஸ்கர மணியன் தலைமை தாங்கினார். முகாமில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான பாரனூர் கிராமத்தில் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி எடுத்துரைத்தார்.மேலும் பிரதம மந்திரி கௌரவ ஊக்கத் தொகை திட்டத்தில் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் இணைக்கும் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.

வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் இடுவதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் சீதாலட்சுமி கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஜிப்சம் இடுவதின் பயன்கள் பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் கலைப்ரியா, வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள்கள் மற்றும் அதன் மானியங்கள் விவரம் பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரிஷி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த் ஆகியோர் செய்தனர். இந்த பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Baranur ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி