×

கால்நடை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்

 

பரமக்குடி,ஆக.30: தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கலைஞரின், நூற்றாண்டுவிழாவினையொட்டி பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி தலைவர் சேது.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்எல்ஏ முருகேசன் விவசாயிகளுக்கு ரூ.36 லட்சம் மாட்டு கடன் வழங்கினார். சிறந்த கரவை உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கான மருத்துவ முகாமில் 1028 பசு மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு கூடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் சிகிச்சை, சினை பரிசோதனை, அம்மை நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.முகாமில் இணை இயக்குனர்(பொ) ராதாகிருஷ்ணன், பால்வளம் துணைப்பதிவாளர் புஷ்பலதா, காரைக்குடி ஆவின் உதவி பொது மேலாளர் பாண்டி செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

The post கால்நடை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Tamil Nadu Government ,Dairy Department ,Animal Husbandry Department ,Ramanathapuram ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி