×

திண்டுக்கல்லில் கேரம் சாம்பியன் ஷிப் போட்டி

திண்டுக்கல், ஆக. 30: திண்டுக்கல் வேடப்பட்டியில் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் கேரம் அகாடமி இணைந்து முதலாமாண்டு சாம்பியன் ஷிப் போட்டி கடந்த 2 நாட்களாக நடத்தியது இதில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கேரம் சங்க மாவட்ட செயலாளர் ஆல்வின் செல்வகுமார், மாநில கேரம் சங்க உதவி செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில துணை தலைவர் நாட்டாண்மை காஜா மைதீன் முதலிடம் பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் காயத்ரி, பிரண்ட்ஸ் கேரம் அகாடமி தலைவர் முகமது அஜ்மீர் அலி, செயலாளர் அஜாருதீன் மற்றும் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் கேரம் சாம்பியன் ஷிப் போட்டி appeared first on Dinakaran.

Tags : Carrom Championship ,Dindigul ,Dindigul Vedapatti District Carrom Association ,Friends Carrom Academy ,Dindigul Carrom Championship Competition ,Dinakaran ,
× RELATED லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக...