×

கட்சி, ஆட்சியை கட்டுக்கோப்புடன் நடத்துவதில் கலைஞரின் உருவாகவே மு.க.ஸ்டாலின் காட்சியளிக்கிறார்: பொன்குமார் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவராக பொறுப்பேற்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த ஐந்தாண்டு காலத்தில் அவர் சந்தித்த சோதனைகள் அதனை சாதனைகளாக மாற்றிய சாதுர்யம், கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்கோப்புடன் நடத்தி வரும் பாங்கு, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்லும் விதம், இவை அனைத்தும் கலைஞரின் உருவாகவே மு.க.ஸ்டாலின் காட்சியளிக்கிறார்.

ஒன்றிய சனாதான சக்திகளை எதிர்த்து நின்றவர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகளை பார்த்த பிறகு தான் இந்திய அளவில் பல்வேறு தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிற இந்தியா கூட்டணி என்பதை எவரும் மறந்திட முடியாது. ஆகவே மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் ஜனநாயகத்தை காக்கவும் சமூக நல்லிணக்கத்தை பேணவும்; இன, மொழி, மண்ணைக் காக்கவும் உயர்ந்து நிற்கக்கூடிய சிறந்த தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள் அவரை விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வாழ்த்தி வரவேற்கிறது.

The post கட்சி, ஆட்சியை கட்டுக்கோப்புடன் நடத்துவதில் கலைஞரின் உருவாகவே மு.க.ஸ்டாலின் காட்சியளிக்கிறார்: பொன்குமார் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers-Workers Party ,President ,DMK ,
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...